மனு:அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும், விவசாயிகள், பொதுமக்களுக்கு நேரடியாக குறித்த காலத்தில் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் சிறு, குறு விவசாயிகள், பெருவிவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாங்கள் பொறுப்பேற்று, முதல் கையெழுத்தாக கடன் தள்ளுபடி இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் குழாய் பதிப்பதையும், ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எரிவாயு எடுக்கிறோம் என்கிற பெயரில் விளை நிலங்கள் பாழ்படுத்தப்படுவதையும், குடிநீர், நிலத்தடி நீர் பறிபோவதையும் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விளைநிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.








