கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா...? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா...?

லகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று  பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக திகழ்ந்து வருகிறது. இதில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இலட்சத்தீவு கடல், அந்தமான் கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன. இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை. உலக பெருங்கடல்களில் ஏழுவகை ஆமைச் சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன. காலம் முழுவதும் கடல் நீரிலேயே வசிக்கக் கூடிய ஆமைகள் இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் கரை பகுதிகளில் வந்து முட்டையிட்டு செல்லுகின்றன. அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடற்கரை பகுதிகளையே முட்டையிட ஆமைகள் தேர்ந்தெடுக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தமட்டில் கன்னியாகுமரிக்கும், திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளிலும், தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இவ்வாறு பிறக்கும் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த இடத்தின் நிலவியல் அமைப்பு, காந்தபுலம், தோற்றம், நறுமணம் ஆகியவற்றை தங்கள் உணர்வில் பதிந்து கொண்டு வளர்ச்சி அடைந்த பின் குஞ்சு பொறிக்க இந்த இடத்தினையே தேர்வு செய்யும் வினோத பழக்கம் கொண்டவை.

சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுமார் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடியவை. இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன. கடல் ஆமைகள் தங்கள் சுவாசத்தின் போது கடல் நீரை மாசு படுத்தாமல் சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டவை ஆகும். இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின்றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகழிடமாக கச்சத் தீவு இருந்து வந்தது. இதனால்தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது. கடல் நீரை இயற்கையாகவே சுத்திகரித்து தரும் ஆமைகளின் உயிருக்கு தற்போது பல வகைகளிலும் ஆபத்துகள் நேர்ந்து வருகிறது. முட்டையிடும் பருவ காலங்களின் போது கரையை நோக்கி வரும் ஆமைகள் இழுவலையில் சிக்கி உயிரிழப்பதும், கடலில் தூக்கி எரியப்படும் கழிவு பொருட்களாலும், இனப்பெருக்க பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடபடாத பணிகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.News sourec and Thanks to Kalvivikadan

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H