பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2016 தேர்வர்கள் பள்ளிகள்/தேர்வு மையங்கள் மூலம் ஆன் - லைனில் விண்ணப்பித்தல் - அறிவுரை வழங்கி இயக்குனர் கடிதம்.
நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தோல்வியுற்ற / வருகைப்புரியாத தேர்வர்களுக்கு 29.06.2016 முதல் 08.07.2016 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 01.06.2016 முதல் 04.06.2016 வரை பள்ளிகள் / தேர்வு மையங்களுக்குச் சென்று பதிவு செய்யுமாறு தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







