தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான
விண்ணப்பங்களை கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 மாணவர்கள்
பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச்
சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.
சென்னை
உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல்
மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.முதல் நாளான
வியாழக்கிழமை 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381
பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும், திங்கள்கிழமை 3,365 பேரும்,
செவ்வாய்க்கிழமை 2,134 பேரும் என கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 பேர்
விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.ஆன்லைன் மூலமும்...:
இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org மூலமும்
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஜூன் 6 கடைசி:
விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.பூர்த்தி செய்த
விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை இதுவரை 350 பேர் சமர்ப்பித்துள்ளனர்.







