திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். படிப்புகளுக்கு ஜூன் 19-ம் தேதிநுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்.
படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 19-ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழக
பிரதான வளாகத்தின் மொழியியல் துறைக் கட்டடத்தில்
நடைபெறுகிறது.விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு, பிளஸ் 2
வகுப்பின் அசல் மதிப்பெண் பட்டியலுடன் நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் வர
வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.







