பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தி எண்ணெய்
நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விலை உயர்வு நள்ளிரவு முதல்
அமலுக்குவந்தது.ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் பெட்ரோல்,
டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 காசுகளும், டீசல் விலை ரூ.2.26
காசுகளும் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்த விலை உயர்வு நேற்று(31-05-16) நள்ளிரவு முதல் அமலுக்கு
வந்தது.பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி ஒவ்வொரு
மாநிலத்திலும் மாறுபடும். அதனால் ஒவ்வொருமாநிலங்களிலும் விலையில் மாற்றம்
இருக்கும். இதன்படி தலைநகர் டில்லியில் பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ.63.02லிருந்து, ரூ.65.60 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு
ரூ.51.67லிருந்து, ரூ.53.93 காசுகளும் உயர்ந்துள்ளன.சென்னையில் பெட்ரோல்
விலை லிட்டருக்கு ரூ.62.47லிருந்து, ரூ.65.04 காசுகளும், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.53.09லிருந்து, ரூ.55.44 காசுகளும் உயர்ந்துள்ளன.







