மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட்
கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை
அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது:
வழக்கமாக,
மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க,
கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை,
'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண
மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு,
ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து,
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.







