Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகள் ..
நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
கல்விக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் வருமாறு:
1. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.
2. ஆசிரியர் தேர்வானது வெளிப்படைத் தன்மையுடனும், நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.
3. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.
4. அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதி சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
5. ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதை மாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக மாற்றலாம்.
6. முன்பள்ளி கல்வி என்று சொல்லப்படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
7. அய்ந்தாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேபோல் பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிரூபிக்க 2 வாய்ப்பு வரை வழங்கலாம்.
8. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் 2 வகையாக கலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், மற்றவர்கள் 2ஆம் தர தேர்வுகளையும் எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.
9. போர்டு தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பை எந்த முறையிலும் கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதித் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.
10. அய்நதாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளில் இரண்டாம் மொழியையும், செகண்டரி வகுப்புகளில் 3ஆம் மொழியையும் அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
11.மத்திய உணவுத் திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் ஆகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.
12. கல்வி உதவித் தொகைகள் சரியாகப் பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கான மானியக் குழு ஆணையம் (யூஜிசி) எளிமையான வரை முறைகளை உருவாக்க வேண்டும்.
13. உலகின் தலை சிறந்த 200 வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், நம் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.
14. பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பிரச்சினை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
15. கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாக தகுதி உயர்த்தப்பட வேண்டும்.
16. கல்விக் கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர் கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








