நாசா
விஞ்ஞானிகள், கலிபோர்னியாவின் சான்டியாகோ மாகாண பல்கலை குழுவினருடன்
இணைந்து, கெப்ளர் தொலைநோக்கியின் உதவியுடன் புதிய கோள் ஒன்றினை
கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கோளிற்கு கெப்ளர்-1647பி எனப்
பெயரிட்டுள்ளனர். பூமியிலிருந்து 3,700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இக்கோளை
நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இரு சூரியன்களை சுற்றி வரும் இந்த
கோள், வியாழன் கோள் அளவுக்கு பெரியது. இதுவரை கண்டபிடிக்கப்பட்ட கோள்களில்
இதுதான் மிகப் பெரியது.
பூமியின் வயதினை ஒத்திருக்கும்
இக்கோள், 4.4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என
கணிக்கப்பட்டுள்ளது. வாயுவால் சூழந்துள்ள இக்கோளில் மனிதன் வாழ
சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இக்கோளிற்கு திடநிலையிலுள்ள
துணைக்கோள்கள் ஏதும் இருக்குமானால், அதில் மனிதர்கள் வாழ சாத்தியம் உண்டு
எனவும் தெரிவித்தனர்.







