வரும்(ஜூன் மாதம்) 28ம் தேதி முதல்
ரூ.251 விலையிலான 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரிங்கிங் பெல் நிறுவனத்தின்
இயக்குநர் மோஹித் கோயல் கூறியதாவது: வரும் 28ம் தேதி முதல் 251 ரூபாய்க்கு
'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும். முதற்கட்டமாக
முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் கிடைக்கும். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி
வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.







