ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது,
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
துரைமுருகன்:பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வருகின்றனர். இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
அமைச்சர் வீரமணி:இப்போதுதான் அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் புதியவர். கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.








