புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.பள்ளிகளுக்கு புத்தகங்களை சுமந்து சென்று வகுப்பறைகளில் கரும்பலகைகளில் எழுதிப் படித்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பாடங்களைக் கற்பிப்பதற்கு தற்போது பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்நிலையில், அறிவியல் பாடங்களை கணினி மூலம் கற்பித்து, புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.ரவி. தனது முயற்சிகள் குறித்து அவர் கூறியதாவது:
அறிவியல் பாடப் புத்தகத்தை ஸ்கேன் செய்து, கற்பிக்கக்கூடிய பாடத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரொஜக்டர் மூலம் பெரிதாக திரை யில் காண்பிப்பதாலும், அந்த பாடம் தொடர்பான வீடியோக்களை காண்பிப்பதாலும் மாணவர் கள் எளிதில் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இதற்காக, நூற்றுக்கணக்கான வீடியோ காட்சிகளைப் பயன்படுத்துகிறேன் என்றார்.கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் புத்தகமில்லா கற்றல் முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஆசிரியர் எஸ்.ரவியின் கோரிக்கையாகும்.








