Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்று இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு : 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்:
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய
தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு, இன்று இரண்டாம் கட்டமாக
நடக்கிறது; 4.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். 'அனைத்து மருத்துவ
படிப்புகளிலும் சேருவதற்கு, மத்திய அரசின், 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதில் ஏற்கனவே, 'நீட்' தேர்வை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.'அப்ஜெக்டிவ்' வினாக்கள் :
அதேநேரம்,
'அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் தனியார்
நிகர்நிலை பல்கலைகளின் மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வை கட்டாயம்
எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; மத்திய அரசும் இதை
ஏற்றது.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வழக்கமான, 'நீட்' தேர்வு, ஏற்கனவே மே
மாதம் நடந்து முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இந்த ஆண்டு
இரண்டாம் கட்டமாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், நாடு
முழுவதும், 4.7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 5,000க்கும்
குறைவான மாணவர்கள் தான், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து
உள்ளனர்.இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், 180 ஒரு
மதிப்பெண்களுக்கான, 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் :
'நீட்'
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல், ஆக., 4 முதல், 6
வரையிலும்;விடைக்குறிப்புகள், ஆக., 7 முதல், 9 வரையிலும், மத்திய இடைநிலை
கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும். தேர்வு முடிவுகள்,
ஆக., 17ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து
தனியார் மருத்துவ பல்கலை மற்றும் கல்லுாரிகளில் சேர, 'நீட்' தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் உட்பட, 14 மாநிலங்களில் உள்ள
கல்லுாரிகளில், 'நீட்' தேர்வு இல்லாமல், எம்.பி.பி.எஸ்., மற்றும்
பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்கள்
தேர்வு முடிவுப்படி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து
கல்லுாரிகளிலும், மத்தியஅரசின், 15 சதவீதமான, 40 ஆயிரம் இடங்கள் இந்த
தேர்வு முடிவுப்படியே நிரப்பப்படும். தமிழக மருத்துவ கல்லுாரிகளிலும், 15
சதவீத மத்திய அரசு இடங்கள், 'நீட்' மதிப்பெண் படியே நிரப்பப்பட உள்ளன.
'பேனா, வாட்ச்' மூக்குத்திக்கு தடை -மெட்டல் டிடெக்டர் சோதனை :
'நீட்'
தேர்வில் முறைகேட்டை தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு தேர்வு அறையிலேயே பேனா வழங்கப்படும். 'வாட்ச், ஷூ, சாக்ஸ்'
மூக்குத்தி, காது வளையம், கழுத்து செயின், தலைமுடி 'கிளிப்' உள்ளிட்ட
ஆபரணங்கள் அணிந்து செல்லக்கூடாது. கால்குலேட்டர், மொபைல் போன் கொண்டு
செல்லக்கூடாது. தேர்வு மையங்களில், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை
செய்யப்படும். ஒவ்வொரு தேர்வு அறையிலும், இரு கண்காணிப்பாளர்கள் பணியில்
ஈடுபடுவர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








