பி.இ.: 6,600 பேர் சேர்க்கை
பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 6,606 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 27-இல் தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஜூலை 21 வரை நடத்தப்பட உள்ளது.
இதன் மூன்றாம் நாளான புதன்கிழமையன்று 3,394 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,616 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். 762 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 16 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.இதுவரை மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே அதிகமானோர் விரும்பும் பிரிவாக இருந்து வருகிறது. இந்தப் பிரிவை 1,473 பேர் தேர்வு செய்துள்ளனர்.
பி.இ. கணினி அறிவியல் பிரிவை 1,056 பேரும், இயந்திர
வியல் பிரிவை 1,008 பேரும் மின்னியல் மின்னணுவியல் பொறியியல் பிரிவை 682 பேரும், தகவல் தொழில்நுட்ப பிரிவை 518 பேரும், கட்டடவியல் பிரிவை 420 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.