விளையாட்டு தொடர்பான பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், தொலைநிலை கல்வியில், பல்வேறு பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது.பி.பி.ஏ., விளையாட்டு மேலாண்மை, பி.எஸ்சி.,யில், யோகா தொடர்பான ஆறு வகை படிப்புகள், எம்.பி.ஏ., விளையாட்டு மேலாண்மை, எம்.எஸ்சி.,யில், யோகா, மனோதத்துவவியல், விளையாட்டு ஊடக செய்தி சேகரிப்பு, வர்மம் மற்றும் மசாஜ்கலை, அக்குபஞ்சர், நினைவாற்றல் வளர்ப்பு மற்றும் நரம்பியல் என, பல வகை படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம்என, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.