ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களுக்கு முறைகேடாக பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கியது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகம் முழுவதும் 2012-இல் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி, தோட்டக் கலை உள்ளிட்ட பாடப் பிரிவுக்கு 16,549 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதில்,ஓவிய ஆசிரியர் பணி இடத்துக்கு டி.டி.சி. எனும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியானது ஆசிரியர் பணிக்கு முக்கியத்துவம் ஆகும். ஆனால், இப்பயிற்சி முடிக்காத பலருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 146 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதில், ஓவியம், தையல், இசை பணியில் மட்டும் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் 22 பேர்உள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக 1,164 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், ஓவியம், தையல், இசை ஆசிரியர் பணி இடங்களில் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் 217 பேர் உள்ளதாக தகவல் தெரியவருகிறது. கணினி ஆசிரியர் பணிக்கு பி.எட்., முடிக்காதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.Source Dinamani...







