ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா !!!
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரை:
அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்-கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் ,விழுப்புரம் மாவட்டம்.நாள்:28.07.2016 மாலை 02:00 முதல் 04:30 வரை:

விழுப்புரம்
மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்
பள்ளி தெங்கியாநத்தம்.2015-2016ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்
தேர்வில் இப்பள்ளியில் இருந்து 65மாணவர்கள் தேர்வு எழுதினர்,இவர்களில் 65
மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மற்றும் முதல் மதிப்பெண் 473 மதிப்பெண்களை பா.ஹரிஸ்குமார் என்ற மாணவன்
பெற்றுள்ளான்.மேலும் இப்பள்ளியில் 3 மாணவர்கள்
கணிதத்தில் 100 மதிப்பெண்களும் சமூகவியலில் 4மாணவர்கள் 100மதிப்பெண்கள்
பெற்றுள்ளனர்.18மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
இந்த சாதனையை பாராட்டி தலைமை ஆசிரியர் திரு.கா.மணி,மற்றும் ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்ஸ் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்கள் பாராட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு (Magnificent Makers Award) விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்,இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் சிறப்புரையில் பின்லாந்து நாட்டின்கல்வி முறைகளை பற்றியும் அதில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிந்துகொள்ளும் செய்திகளை தெளிவாக விளக்கினார் மற்றும் 100% தேர்ச்சி கணிதம் சமூகவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெறுவதற்கு முக்கிய காரணம் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பு என பாராட்டினார். மேலும் இந்த ஆண்டும் 100% தேர்ச்சி பெறவேண்டும் மற்றும் மாநில அளவில் மதிப்பெண்களை பெற முயற்சிக்க வேண்டும் வாழ்த்தினார்.
கணிதம்,சமூகவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தில் 95மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கும் ரூ 1000 வீதம் பாட ஆசிரியர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.சென்ற ஆண்டும் இப் பள்ளி 100% தேர்ச்சியும், 490 மதிப்பெண்கள் எஸ்.சிவக்குமார் என்ற மாணவன் பெற்று கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம் ஆனால் இனி இது சாத்தியம்.அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுஅதை மெய்பிக்கும் வகையில் உள்ளது.இப் பள்ளி தொடந்து 100%தேர்ச்சி பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.