எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு
நடத்தும்படி, 10 பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த, சுயநிதி
கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்க தலைவர் கலீல் தாக்கல்
செய்த மனு:
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளைப் பொறுத்தவரை, அண்ணா பல்கலை மட்டுமே,
நுழைவுத் தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில், மாணவர்களை
சேர்க்கிறது. சென்னை பல்கலை, வேலுார் - திருவள்ளுவர், காரைக்குடி -
அழகப்பா, மதுரை - காமராஜ் உட்பட, 10 பல்கலைகளின் கீழ் இணைப்பு பெற்ற
கல்லுாரிகளில், நுழைவுத் தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் இல்லாமல்,
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். நுழைவுத்
தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் மட்டுமே, எம்.பி.ஏ., -
எம்.சி.ஏ., படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரி
களுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைகள் உத்தரவிட வேண்டும்.நுழைவுத் தேர்வு
நடத்துமாறு கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, அந்த பல்கலைகள் மற்றும்
மாணவர் கள் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சத்தியநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது.
மனு குறித்து, மாணவர்கள் சேர்க்கை குழுவிடம் விளக்கம் பெறும்படி,கூடுதல்
பிளீடர் சஞ்சய் காந்திக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 14க்கு, நீதிபதி
தள்ளிவைத்தார்.







