மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை
நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு
நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்
தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல்
நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு
வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால்
ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.கேந்திரீய
வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள்
மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘சி-டெட்’
எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதேபோல்குறிப்பிட்ட
மாநிலத்தில் உள்ள பள்ளிகள் எனில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித்
தேர் விலும் (டெட்) தேர்ச்சி பெற வேண் டும். தமிழகத்தில்
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம்
ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வுகள்
நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ)
விதிமுறை ஆகும். தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ம் ஆண்டு ஜூலை
மாதம் நடத்தப் பட்டது. அந்த தேர்வில் நேரக் குறைவு காரணமாக தேர்ச்சி பெற்ற
வர்களின்எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் நேரத்தை அதிகரித்து
அதே ஆண்டு அக்டோபர் மாதம் துணைத் தேர் வாக இன்னொரு தேர்வு நடத்தப் பட்டது.
அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தேர்வு என மொத்தம் 3
தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித்
தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான தகுதித் தேர்வுகள் என்று
பார்த்தால் இதுவரையில் 3 தகுதித் தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில்
மத்திய அரசு சார்பில் சி-டெட் தகுதித் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அமைப்பு
என்சிடிஇ விதிமுறையின்படி திட்ட மிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி,
செப்டம்பர்) தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை யில் 9 சி-டெட்
தேர்வுகள் நடத்தப் பட்டுள்ளன. 10-வது சி-டெட் தேர்வு வருகிற செப்டம்பர்
மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 18-ம் தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2
தடவைஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3
ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படா மல் உள்ளது. இதனால்,
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை
அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தகுதித் தேர்வு மதிப் பெண், பிளஸ் 2, பட்டப்
படிப்பு ஆசிரியர் படிப்பு மதிப்பெண் (வெயிட்டேஜ் மார்க் முறை) அடிப்படையில்
நடைபெறுகின்றன. தகுதித் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது.
எனினும் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை அதிகப்
படுத்த விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். அரசு
உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு
உடனடியாக பணி வழங்கிவிடு கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு
நடத்தப்படாததால் இந்த 3 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களால் தகுதித்
தேர்வை எழுத முடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பாக கிறிஸ்தவ
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரும்
தகுதித் தேர்வை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
தகுதித் தேர்வு
நடத்தப்படாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,
“தகுதித் தேர்வு தேர்ச்சியில்இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5
சதவீத மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை ஆகியவை தொடர்பான வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிவுக்கு
வந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”
என்று தெரிவித்தனர்.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு
அளிக்கப்பட்ட 5% மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை தொடர்பான வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிந்ததும்
தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.