அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை
தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். குரூப்-1முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந்
தேதி வெளியிட்டது.
மேலும்
நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந்
தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும்
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான
குரூப்-1 முதன்மைதேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற
உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை
முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே
ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் முதன்மை தேர்வினை தள்ளிவைத்து
2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி
தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன்
மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் 2015-16-ம் ஆண்டுக்கான தேர்வு
எழுதுவதில் இருந்து விலகுவார்கள். இதன் மூலம் முதன் முறையாக முதன்மை தேர்வு
எழுதுவோர் பயன்பெறுவார்கள். இம்மாதம் 31-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி
பணிகளுக்கான முதன்மை தேர்வு, ஆகஸ்டு 7-ந் தேதி நடைபெற உள்ள மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் நடத்தும்முதல் நிலை தேர்வு என அடுத்தடுத்து தேர்வுகள்
உள்ளது. தேர்வு தள்ளிவைக்க வேண்டும் இந்த தேர்வுகளை
பெரும்பாலானோர் எழுத உள்ளதால் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற
உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தள்ளிவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்
இடையே உள்ளது. இதற்கிடையே குரூப்-1 நேர்முக தேர்வுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கையுடன் கூடிய மனுவினை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சமர்பித்துள்ளனர்.







