Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தேசிய இளைஞர் விருதுக்கு 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய இளைஞர் விருதுக்கு இளைஞர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் வரும்
25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராஜேந்திரகுமார் இன்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில்,
''விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும்
தேசிய இளைஞர் விழாவில், சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப் பணிகளை
சிறப்பாக செய்யும் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மத்திய அரசு தேசிய
இளைஞர் விருது வழங்குகிறது. 25 இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம்,
பதக்கம் வழங்கப்படுகின்றன. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம்
ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும்.1-4-2015 முதல் 31-3-2016 வரையிலான
காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதி
ஆண்டில் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவுக்கான விருதுக்கு வயது 15 முதல்
29-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல்
தொண்டாற்றியிருக்க வேண்டும்.ஏற்கெனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்
கூடாது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில்
பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. தொண்டு நிறுவன பிரிவின் கீழ்
வழங்கப்படும் விருதுக்கு, தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க
வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு ஆற்றியிருக்கக் கூடாது.குறிப்பிட்ட
சாதி, மதம் அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க
இயலாது.விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர்
அலுவலகத்தில் பெற்று பூர்த்திசெய்து வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில்
(www.sdat.tn.gov.in) இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான
குழுவால் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை
செய்யப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் மாநில குழுவால்
பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்'' என்று
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








