* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடமே உள்ளது.
* தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகில் எங்குமில்லை.
* சமுதாயத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே வலிமை. கூடி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.
* கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெற முடியும். அதனால் நாம் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்.
* நற்செயலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராய் இருங்கள். யாரிடமும் சிறிதும் வெறுப்பு கொள்ள வேண்டாம்.
* ரகசியமாகப் பிறரைக் குறை சொல்வது பாவம்.








