Tamilnadu educational Minister biography: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Tamilnadu educational Minister biography:

Ma Foi K.Pandiarajan | AIADMK AVADI CONSTITUENCY MLA
மா ஃ பா.பாண்டியராஜன் MLA அவர்கள்
மா ஃ பா.பாண்டியராஜன் MLA, சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி – சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன் தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.படிப்பில் சுட்டியாகவும், விளையாட்டில் சிறந்து விளங்கிய பாண்டியராஜன் சிவகாசி SHNV பள்ளயில் பள்ளிபடிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் PUC வகுப்பையும் நிறைவு செய்தார்.
பின் பொறியியல் மாணவர்களின் கனவு தேசமான புகழ் பெற்ற கோயம்பத்தூர் PSG கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில்(XLRI) எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.
வங்காளத்தில் பணி புரியும் பொழுது ஆடிட்டர் பணிக்கு வந்த ஹேமலதாவுடன் காதல் மலர்ந்து திருமணம் நடைபெற்றது. ஆதர்ஷ தம்பதிகளுக்கு முன்னுதாரனமாக விளங்கும் இத் தம்பதிகளின் முதல் குழந்தை தான் Rs.60000 முதலீட்டில் ‘’Mafoi’’ நிறுவனம் . பிரஞ்சு வார்த்தையான மாஃபா என்றால் ‘’எனது வாக்கு’’ என்று பொருள்படும்.வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கும் காலக்கட்டத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் வேலை தேடி வரும் நபர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து ஆலோசனை சொல்லி தகுதிகளை மேம்படுத்தி பல நிறுவனகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பிய அணுகுமுறை இந்திய மனித வள மேம்பாடு துறையில் அதற்கு முன் இல்லாத அணுகுமுறை.
பாண்டியராஜன், லதா தம்பதிகளின் கடின உழைப்பும் நேர்மையும் அறுபதாயிரம் ரூபாயில் 1992 துவங்க பட்ட Mafoi நிறுவனம் 2010 ஆம் ஆண்டு தனது டர்ன் ஓவர் 1000 கோடியை எட்டியது. ஒரு கட்டத்தில் அறுபதாயிரம் ஊழியர்களுடன் தன் வேர்களை விஸ்தரித்தது. இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார். மனித வள மேம்பாடு துறையில் இந்திய அளவில் பிரபலமானவராக அறியப்பட்ட பாண்டியராஜன் தான் வளர்ந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது. அதன் எதிரொலிதான்.
மனித நேயர்
• சென்னை ,மதுரை,விருதுநகர்,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் வாழ்வாதாரத்தை விளங்கும் சொர்ணம்மாள் அறக்கட்டளை.
• இது வரை 2000 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்து உயிர் காக்கும் சேவை அளிக்கும் ஏகம் பவுண்டேசன்.இன்று இந்தியா முழுவதும் அரசு உதவியுடன் பல சுகாதார திட்டங்களை கொண்டு செல்கிறது. ,
• 4000 மாணவர்களுக்கு மேல் கல்வி உதவி தொகை வழங்கி பயிற்சிகள் வழங்கும் திஷாதிட்டம்
• 100 மாலை நேர கல்வி சாலைகள்.
• விதவைகளுக்கு பொருளாதார கடன் வழங்கும் அன்பாலயம் திட்டம்.
• என்.ஜி.ஓ.க்களின் கோரிக்கைகளை, தேவைகளை அரசிடம் கொண்டு சேர்ப்பதற்கு, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதிகளை அவர்களிடம் சேர்ப்பதற்கு, நிதி திரட்டுவதற்கு நல்ல அமைப்பு வேண்டும். என்.ஜி.ஓ.க்களிடையே தகவல்கள், திறமைகள், வள வாய்ப்புகள் ஆகியவை பரஸ்பரம் பகிர்ந்து-கொள்ளப்பட வேண்டும். இதையெல்லாம் ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு வேண்டும். நிறைய ஏமாற்று அமைப்புகள் உள்ளன. ஆனால் நேர்மையான, அக்கறை உள்ள ஒரு அமைப்பை இதற்காக உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக சியோசா (Confederation of Indian Organisations for Service and Advocacy – CIOSA) அமைப்பைக் கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறார்.
• ஏழை ,குடிசை பகுதிகளில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களின் திறமை பொருளாதார நிலைமையின் காரணமாக வீணாக கூடாது என்ற எண்ணத்தில் ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாக்க திசா விளையாட்டு கழகம்(DISHA SPORTS) ஏற்ப்படுத்தினார்.இதன் மூலம் பயிற்சி பெற்ற ஏழை விளையாட்டு வீரர்கள் இந்திய அளவில் பரிசுகளை குவித்து வருகிறார்கள்.
இவர்களின் தொண்டு நிறுவனத்தில் மட்டும் சேவை செய்ய 100க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தில் வேலை செய்கிறார்கள் என்றால் இவர்களின் நிறுவனத்தின் சமூக பங்களிப்பை அறியலாம்.
அரசியலில் ஆச்சரிய மனிதர்.
திருவள்ளுவர் விருது
ஒரு அரசுசாரா அரசியல் கண்காணிப்பு அமைப்பு தமிழக எம்.எல்.ஏ.க்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதற்கு ஒத்துழைத்த எம்.எல்.ஏ.க்கள் மொத்தமே நான்கு பேரோ, ஐந்து பேரோதான். அதில் ஒருவர் பாண்டியராஜன். அவ்வமைப்பு சென்னையில் நிகழ்த்திய லஞ்சம் வாங்காத சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டுவிழாவில் ‘’திருவள்ளுவர் விருது’’ பெற தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பாண்டியராஜன் முதன்மையானவர். இவரைப்போன்ற மக்களை நிஜமாகவே பிரதிநிதிக்கும் பிரதிநிதிகள் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி எனலாம்.
எழுத்தாளர் பாண்டியராஜன்
பாண்டியராஜன் மனித வள நிபுணராக, சேவை நிறுவனம் நடத்தும் சமூக ஆர்வலராக,அரசியவாதியாக அறிந்த நமக்கு அவரின் இன்னொரு முகம் எழுத்தாளர் என்றால் ஆச்சரியம் எழுவது ஆச்சரியமில்லை.இவர் வளரும் சமுகத்தின் சுயமுன்னேற்ற நூல்களான யு ஆர் அப்பாயின்டட் மற்றும் ஆயரத்தில் ஒருவன் என இரண்டு நூல்களை தன் பிஸியான நேரத்திலும் எழுதி உள்ளார்.
இவர் பேசாத மேடையுள்ள ,கால் பதிக்காத கல்லூரிகள் தமிழகத்தில் மிகக்குறைவு.
ரோட்டரி.லயன்ஸ்,YES,YPO,CII,TiE என பல சமூக,தொழில்முனைவோர் அமைப்புகளின் அமைப்புகளின் தீவிர உறுப்பினர், பொறுப்பாளர். ஐசனோவர் பெல்லோஷிப் பெற்ற இவர் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்காலம் அவர்களுடன் இணைந்து ‘’இணைந்து நாம்’’ என்ற திட்டத்தை செயலாக்கம் செய்துள்ளார்.
நாடக, நடிப்பு கலை பயிற்சி பள்ளியான ‘’கூத்துப்பட்டறை’’ இயக்குனர். விருதுநகர் காமராஜர் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். என பல தளங்களில் விளையாடும் சகலகலா வல்லவர் தான் நம் மண்ணின் மைந்தர் க. பாண்டியராஜன்.மனித நேயர், கல்வியாளர், மனித வள மேம்பாட்டுதுறை வித்தகர், எழுத்தாளர், அணுகுவதற்கு எளிமையான அரசியல்வாதி, ஒரு கரம் கொடுத்ததை மறுகரம் அறியா கொடையாளர். எந்த துறையை பற்றி இவரிடம் கேட்டாலும் குற்றால அருவியாக தகவல்களை கொட்டும் நடமாடும் விக்கிபீடியா. என இவரைப்பற்றி சொல்லி கொண்டே போகலாம்…

கல்வித்துறைக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H