தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்று வருகின்றன..
இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..
ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்..
படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..
சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச் சிறகு, துளிர், விழுது போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்படும்..
*மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் செப்.10,11 தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்..
*www.tnsf.co.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்..
*கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் இவர்களுக்கான பாராட்டு விழா செப். இறுதியில் விழுப்புரத்தில் நடைபெறும்..
*பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்..
ஆசிரியர் தின போட்டிகள் விபரம் 2016
பள்ளி மாணவர்களுக்கான
கட்டுரைப் போட்டி
அன்புள்ள ஆசிரியருக்கு…
(4 பக்கங்களுக்கு மிகாமல்)
கல்லூரி மாணவர்களுக்கான
கவிதைப் போட்டி..
நான் விரும்பும் வகுப்பறை
(20 வரிகளுக்குள்)
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான
கட்டுரைப் போட்டி:
என்னைச் செதுக்கிய மாணவர்கள்..
(6 பக்கங்களுக்கு மிகாமல்)
பொதுமக்களுக்கான
கட்டுரைப் போட்டி..
அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கு
📞மேலும் விபரங்களுக்கு…
வே.பாலமுருகன்
மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2016
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி: 9488284512








