குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை
நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான
முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில்
நடந்தது; 3,407பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று
முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை
போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி
முதல் நடக்க உள்ளது.







