பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளை முதல்,
இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு, அடுத்த
மாதம் நடக்க உள்ளது. இதற்கு குறித்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியோர்,
செப்., 16, 17ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசுத்
தேர்வு சேவை மையங்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தத்கலில்
விண்ணப்பிக்கும், தனித்தேர்வர்களுக்கு, திருநெல்வேலி, மதுரை, கோவை,
திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின்
தலைமையிடத்தில் மட்டுமே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுத் தேர்வு
சேவை மையங்கள் விபரத்தை,www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







