பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர்
கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான,
பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்.,படிப்புகளுக்கு, 670 தனியார்
கல்லுாரிகளிலும், 21 அரசுமற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த
மாதம்இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசின் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி
இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன்
முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும்,
இன்றுடன் மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல்
பல்கலை,நேற்று மாலை, திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது; இதனால், தனியார்
கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென
மாணவர் சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை எப்படி நடத்துவது;
மாணவர் சேர்க்கைக்கு, மேலும், இரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என,
தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.







