உங்க கூந்தலுக்கு எந்த கண்டிஷனர்?
சிகைக்காய்
பயன்படுத்த சோம்பல்பட்டு ஷாம்புவுக்கு மாறினோம். ஷாம்புவுக்குப் பிறகு
பயன்படுத்த வேண்டிய ஹேர் கண்டிஷனரை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? ஷாம்பு
நம் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு, தூசு, அழுக்குடன் ஈரப்பதத்தையும்
சேர்த்து அகற்றிவிடுகிறது. இழந்த ஈரப்பதத்தை மீண்டும் அளிக்க ஹேர்
கண்டிஷனர் அவசியம். ஹேர் கண்டிஷனர் என்பது என்ன?
ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்த பிறகு, கண்டிஷனரைக் கூந்தலில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சில கண்டிஷனர்களை எண்ணெய் தேய்ப்பது போலவும் பயன்படுத்தலாம். கண்டிஷனரைப் பயன்படுத்தும்போது, முடி வேர்க்காலில் இருந்து ஒரு இன்ச் தள்ளியே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், வேர்க்கால் பகுதியில் இயற்கையாகவே ஈரப்பதம் தக்கவைக்க சுரப்பிகள் உள்ளன.
Read More Click Here








