உலகிலேயே மிகப் பெரிய, 'ரேடியோ டெலஸ்கோப்' எனப்படும், ரேடியோ தொலைநோக்கி,
சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது; இதன் மூலம், வேற்று கிரகங்களில், உயிரினங்கள்
உள்ளதா என்பது குறித்து ஆராய முடியும்.
நம் அண்டை நாடான, சீனாவின் கெய்சோ பிராந்தியத்தில், 500 மீட்டர்
விட்டத்தில், உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அலைவரிசைகளை கிரகித்து, அதன் மூலம் ஆராய்ச்சி செய்யக் கூடிய, இந்த
தொலைநோக்கி, 30 கால்பந்து மைதானங்களின் பரப்பைவிட மிகப் பெரியது.
இந்த தொலைநோக்கி, நேற்று முதல் இயங்க துவங்கியது. 'வேற்று கிரகங்களில்
உயிரினங்கள் உள்ளதா, வேற்று கிரகவாசிகள் உள்ளனரா என்பது குறித்து, இந்த
ரேடியோ தொலைநோக்கி மூலம் ஆராய முடியும்' என, சீனா கூறியுள்ளது.







