தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு
முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது
பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல்
கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி, செப்., 11ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும்,
வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது சிறப்பு முகாம், இன்று நடைபெற
உள்ளது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை,
5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறும்; பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம்
செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.