பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு தேர்வுத்துறை சார்பில்,10 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச்
மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும்சேர்த்து, 18
லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும்
தனியார் பள்ளிஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.இந்தத் தேர்வில், கணினி
அறிவியல் பாடத்திற்கு மட்டும்,'பார் கோடு' உடைய விடைத்தாள்கள்
வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட
வேண்டும்.இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன;
அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது.
மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும்
இருக்காது.
இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு
தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள,
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண்
கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது;
அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.







