கிரீன் டீ ஏன் குடிக்க வேண்டும்???முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல்நலம் குறித்த அக்கறையும், கிரீன் டீக்கு பெரியளவில் செய்யப்படும் விளம்பரங்களும்தான் முக்கியக் காரணம்.








