வணக்கத்திற்குரிய நண்பர்கள் அனைவருக்கும்.......
அன்பு வேண்டுகோள்........
இந்தியாவிலேயே முதல்முறையாக மின்னொளியிலும்,தமிழ்நாட்டில் முதன்முறையாகவும், மாற்றுத்திறன் வாய்ந்தவர்களுக்கான வீல் சேர் பேஸ்கட்பால் போட்டியை ஈரோடு V.O.C Park stadium -தில் செப். 17,18 தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களான சக்தி மசாலா, எம்.சி.ஆர் வேஸ்டிகள்,, மில்கா, மில்கி மிஸ்ட், அக்னி ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும், ஒளிரும் ஈரோடு, ஈரோடை,MR colour lab உள்ளிட்ட சமூக அமைப்புகளும்,பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சக்கர நாற்காலி பேஸ்கட் பால் போட்டியை நடத்துகின்றனர்.
தற்போது பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்ற சேலத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி மாரியப்பன்,வெள்ளிப்பதக்கம் வென்ற ஹரியானாவை சார்ந்த தீபா மாலிக் போன்றோர் இதைப்போல போட்டிகளில் கலந்து கொண்டு நல்ல உள்ளங்களின் ஊக்குவிப்பால் தான் இன்று சாதனைபடைத்துள்ளார்.
எனவே நண்பர்கள் தாங்கள் குடும்பத்தோடு இந்த போட்டி நடக்கும் செப்டம்பர் 17, 18.... மாலை மணி 6 முதல் இரவு 9.30 மணி வரை இரு தேதிகளில் நேரில் வந்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் செப். 17 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள அபிராமி திரையரங்கம் அருகில் இருந்து விளையாட்டு வீர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மெகா பேரணியானது நடைபெற உள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.....
90 சதம் உடல் ஊனமுற்ற, வீல்சேரில் மட்டுமே நகரக்கூடிய திறமை வாய்ந்த 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணியிலிருந்து இந்திய விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர்அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும், கலந்து கொண்டு துவக்கி வைப்பதோடு பரிசுகளையும் வழங்குகின்றனர்
ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டை நேரில் கண்டு இவர்களை உற்சாகப்படுத்துவது இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமமானதாகும்.
பல்வேறு ஊர்களில் இருந்து வரும் இந்த விளையாட்டு வீரர்களின் போக்குவரத்து மற்றும் பராமரிப்பு அனைத்தையும் நான்கு நாட்கள் கணிவோடு ஏற்று நடத்த உள்ளோம்.
இந்த விளையாட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வது மட்டுமல்லாது உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறன்வாய்ந்தவர்களையும் அழைத்து வந்து கான வைத்தால் அதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை மேன்மேலும் வளரும்..
உங்களின் இடைவெளியற்ற தொடர்பணிகளுக்கிடையே எப்படியாவது தங்களின் கால் தடம் இவ்விளையாட்டு விழாவில் பதிக்கவேண்டுகிறோம்.... .....
இந்த விழா செய்தியை அனைத்து நண்பர்களும் அவரவர் பங்கேற்கும் Facebook and WhatsApp குழுவில் பகிர்ந்து மாற்றுத்திறனாளிகள் விளையாட்டை ஊக்குவிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.







