DEEPAVALI SPECIAL SWEETS AND KARAM: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


DEEPAVALI SPECIAL SWEETS AND KARAM:

தீபாவளி பலகாரங்கள் செய்யும் முறைகள் |இன்று கல்விக்குரலின் சிறப்பு பகுதியாக வெளியிடப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் ரவாலட்டு. அம்மா நிறையதடவை தீபாவளிக்கு ரவா லட்டு செய்து கொடுத்திருக்காங்க. தீபாவளிக்கு இன்னும் ரெண்டு, மூணு நாட்கள் இருக்கும்போதே அம்மா ரவா லட்டு, முறுக்குன்னு பலகாரங்கள் செய்ய ஆரம்பிச்சிருவாங்க. அன்றிலிருந்தே எங்களுக்கும் பண்டிகை குதூகலம் தொற்றிக்கொள்ளும். ரொம்ப ஈஸியாக ஸ்வீட்செய்யணும், ஆனா நாள்பட வைத்திருந்து சாப்பிடனும்னு நினைக்கும்போது – அதற்கான என்னோட பெஸ்ட் சாய்ஸ் – இந்த ரவாலட்டு தான்.

தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
(semolina/suji/sooji/upma rava)
சர்க்கரை – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
ஏலக்காய் – 7
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
செய்முறை:
வானலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கவும். இதில் ரவையைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையை தனியே எடுத்துவைக்கவும். வானலியில் நெய்/எண்ணெய் விடாமல் தேங்காய்த்துருவலை லேசாக வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையையும், ஏலக்காயையும் பொடியாக திரித்துக்கொள்ளவும். வானலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பை லேசான பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நெய்யிலிருந்து வறுத்த முந்திரியை வடித்தெடுத்து தனியே வைக்கவும். எஞ்சியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை வானலியில்விட்டுச் சூடாக்கவும். இதனுடன் பொடிசெய்த சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்து பாகுபோல் திரண்டுவரும்போது ரவையும், தேங்காய்த்துருவலும் சேர்த்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். ரவை, சர்க்கரை, தேங்காய் எல்லாம் ஒன்றாகக்கலந்து உருண்டைபிடிக்கும் பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். லேசாக ஆறவைக்கவும்.(உருண்டைபிடிக்கும் பதம் இதற்கு மிகவும் முக்கியம் – ரொம்ப குழகுழப்பான கூழ் போன்றோ / ரொம்பவும் வறண்டு ரவையும், சர்க்கரையும் சேர்த்து கட்டிகளாக மாறும் தன்மையுடனோ இருக்கக்கூடாது.) லேசான சூட்டுடன் இருக்கும்போதே உருண்டைபிடிக்க ஆரம்பிக்கவும். உருண்டைபிடிக்க – பிளாஸ்டிக்தாளினை (8″ X 8″) அளவிலான சதுர துண்டுகளாக நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும். பிளாஸ்டிக்தாளினை விரித்துவைத்து,அதன்மேல் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிலான லட்டு கலவையை வைக்கவும். பிளாஸ்டிக்தாளின் ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து ஒருகையில் பிடித்துக்கொண்டு, மறுகையால் அடிப்பகுதியில் உள்ள லட்டு மாவை இறுக்கி திருகிக்கொண்டே வரவும். இப்போது  உள்ளே பந்து போன்று லட்டு உருண்டுவிடும். இதேபோல் எல்லாவற்றையும் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். ரவாலட்டு தயார்.
  • இதை பார்டி/ ஈவினிங் ஸ்நாக்கிற்கெனவும்  தயாரித்துக்கொள்ளலாம்.
  • குளிர்ந்த தண்ணீரில் கையை நனைத்துவிட்டு உள்ளங்ககையில் வைத்தும் லட்டு பிடிக்கலாம்.
  • சர்க்கரையின் அளவு அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ/ குறைத்தோ சேர்த்துக்கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்புடன் பிஸ்தா,பாதாம்பருப்பு, உலர்ந்த திராட்சை வறுத்தும்  சேர்த்துக் கொள்ளலாம்.
  • ரவையும், தேங்காய்துருவலும் நிறம்மாறாத அளவுக்கு லேசாக வறுக்கவும்.
  • உலர்ந்த தேங்காய்த்துருவல் (dry coconut powder) பயன்படுத்திச் செய்யும்போது தேங்காயை வறுக்கத் தேவையில்லை.பிரஷ்ஷான தேங்காய்த்துருவல் பயன்படுத்தும்போது லேசாக வறுத்துச் சேர்க்க லட்டு நீண்டநாள் கெடாமல் இருக்கும்.
மொத்தமாக லட்டு செய்து காற்று புகாத டப்பா/ ப்ரீசர் பைகளில் (ziploc bags) ப்ரிட்ஜில் வைத்திருந்து மாதக்கணக்கில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

கார வடை (Onion fritters/ Onion bonda)

நேற்றைய சனிக்கிழமைப் பொழுது போன வேகம் தெரியலை. ஸ்ப்ரிங் சீசன் ஆரம்பிச்சு இருக்கிறதால செடிகள் நிறைய நர்சரிகளில் வந்திருக்கும் என வாங்க சென்றிருந்தோம். ஒவ்வொரு வருஷமும் ஸ்ப்ரிங்கில் கொஞ்சமாவது புது செடிகள் என்று ஏதாவது வாங்குவது வழக்கம். காலையிலிருந்தே மேகமாக இருந்த வானம் நாங்கள் நர்சரியில் இருக்கும் போதே தூரல் மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ரொம்ப மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்த ரெண்டு செடியை மட்டும் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். லஞ்ச் முடிந்து எல்லாரும் குட்டித்தூக்கம் போட பறந்துவிட்டார்கள். மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது. எனக்கு ஏதாவது சூடாக போட்டு கொரிக்கலாம் போலிருந்தது. இந்த காரவடைதான் உடனே ஞாபகத்திற்கு வந்தது. இது எங்கள் ஊரில் பெரும்பாலான டீக்கடைகளில் போடுவாங்க. கடலைமாவுடன், கோதுமைமாவையும் கலந்து செய்வாங்க. மத்தவடை மாதிரி இல்லாமல் இதில்  கோதுமைமாவு சேர்த்து செய்வதால் கொஞ்சம் வித்தியாசமாகவும் ரொம்ப சுவையாவும் இருக்கும்.டீயும் இந்த வடையும் சாயாங்கால ஸ்நாக்கிற்கு ரொம்ப நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ½ கப்
கோதுமை மாவு – ½ கப்
அரிசி மாவு- 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
சோடா உப்பு – ½ டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆரஞ்சு புட் கலர் / கேசரி பவுடர் – சிறிது
மிளகாய்த்தூள் – ¼ டீ ஸ்பூன் (தேவைப்பட்டால்)
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு வெங்காயத்தை நீளவாக்கிலும், மற்றொன்றை பொடியாக சிறிய சதுர துண்டுகளாகவும்  நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை இப்படி இரண்டு விதமாக நறுக்கிபோடும்போது வடை நல்லா உருண்டையா போண்டா போன்று உருட்டிபோட வரும். பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.கறிவேப்பிலையை அலசி அதையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு,கோதுமை மாவு,கடலை மாவு மூன்றையும் ஒன்றாக போட்டுக் கலக்கவும். சோடா உப்பு, ஆரஞ்சு கலர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசறிவிடவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளித்து வடையாக உருட்டி போடும் அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளவும். சற்று கெட்டியான மாவாக வைத்துக்கொண்டு எண்ணையில் பொறித்து எடுக்கவும். மாவில் தண்ணி அதிகம் சேர்த்துவிட்டால் உருட்டிபோட வராது. எண்ணையும் அதிகமாக உறிஞ்சும். பிசைந்த மாவில் உப்பு, காரம் சரியாக உள்ளதா என பொரிக்கமுன் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும்,மிளகாய்த்தூளும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். ஒரே மிதமான வெப்பத்தில் சீராக வைத்து வடைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். இதை அப்படியே அல்லது கெட்செப் /சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். நாங்கள் நேற்று இதை டீயுடன் ருசித்து சாபிட்டோம்.

கேரட் அல்வா (Carrot Halwa/ Gajjar Ka Halwa)

கேரட் அல்வா – ரொம்ப கலர்புல்லான, சுவையான ஸ்வீட். வீட்டில் பார்ட்டி அல்லது விசேஷ நாட்களன்று, நான் இதை செய்வது வழக்கம். அதுவும் வாரக்கடைசியில் நடக்கும் இரவுநேர பார்டிகளில், உணவுக்கு பின், ஏதாவது இதுபோன்ற ஸ்வீட் தயாரித்து நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவோம்.கண்டிப்பாக நண்பர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடியும். ஸ்வீட் வகைகளில் ஒரு சில ஸ்வீட் வகைகளை மட்டுமே சூடாக அல்லது குளிர்ச்சியாக சாப்பிட நன்றாக இருக்கும். அந்த வகையில் கேரட் அல்வாவை சூடாக /குளிர்ச்சியாக சாப்பிட இரண்டுமே நன்றாக இருக்கும். வெயில்காலத்தில் கேரட் அல்வாவுடன் சிறிது வெண்ணிலா ஐஸ்கிரீம், வறுத்த பாதாம்/பிஸ்தா பருப்பு சேர்த்து சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பெல்லாம் கேரட் அல்வா செய்வதென்றால், ரொம்ப நேரம் ஆகும். ரொம்ப பொறுமையாக செய்ய வேண்டி இருக்கும். முன்பு பால், மற்றும் கடைகளில் கிடைக்கும் கோவா(சர்க்கரை சேர்க்காத கட்டியாக்கப்பட்ட பால்) வைத்து செய்வேன். அதற்கு பதிலாக இப்பொழுது கன்டென்ஸ்டு மில்க் (condensed milk) வைத்து செய்வதால் எளிதில் செய்துவிடுகிறேன். சுவையும் முன்பைவிட மிகவும் நன்றாக உள்ளது. பிரிட்ஜில் வைத்திருந்து இரண்டு வாரம் வரை கூட, நம் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கேரட் அல்வா செய்ய..
தேவையான பொருட்கள்:
கேரட் – 4
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
உலர்ந்த திராட்சை (கிஸ் மிஸ் பழம்) – 10
ஏலக்காய் – 6
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்
செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். ஏலக்காயை பொடியாக திரித்துக்கொள்ளவும். வானலியில் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். ஒரு அகன்ற பெரிய பாத்திரத்தில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். சூடான நெய்யில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்கவும். கேரட் சற்று வதங்கியபின் ஏலக்காய் பொடியையும், கன்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கன்டென்ஸ்டு மில்க் மற்றும் கேரட்டில் உள்ள தண்ணீர்ப்பதம் படிப்படியாக குறைந்து அல்வா போல் சுருண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.
  • கேரட் அல்வா செய்ய பெரிய பாத்திரத்தை பயன்படுத்த எளிதில் தண்ணீர்ப்பதம் வற்றி அல்வா பதத்திற்கு விரைவில் வந்துவிடும்.
  • கேரட் அல்வா மிக விரைவாக செய்ய நினைக்கும் நாட்களில், கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிய பின் மிக்சியில் போட்டு லேசாக திரிக்க (30 – 45 வினாடிகள் ) கேரட் துருவல் எளிதில் கிடைத்துவிடும்.
  • குளிர்ச்சியாக சாப்பிடும்போது ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
  • விருப்பப்பட்டால் வறுத்த பிஸ்தா, பாதம் பருப்பும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H