கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் 4 பரிசுகளை தட்டி சென்றது-அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியானத்தம்.

இன்று (27.10.2016) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கள்ளக்குறிச்சியில் பள்ளிக் கல்வித்துறையால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம் பள்ளி மாணவர்கள் நான்கு பரிசுகளை தட்டி சென்றனர்.விபரம் பின்வருமாறு.
6 முதல் 8வகுப்புவரை கீழ் நிலையில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இடம் எம்.தரணி ஸ்ரீ என்ற ஏழாம் வகுப்பு ஆங்கில வழி மாணவியும்,கிராமியக்கலை போட்டியில் முதல் இடத்தை ஆறு மாணவர்களும்,பரதநாட்டியம் இரண்டாம் இடம் பி.சிவசக்தி ஆறாம் வகுப்பு ஆங்கில வழி மாணவியும்,உயர்நிலையில் ஓவியம் வரைதல் போட்டியில் A.தமிழ் என்ற மாணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.இம் மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி மற்றும் கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.என்.இராசமாணிக்கம் ஆகியோர் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சியை தரும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமமே நாட்டின் முதுகெலும்பு என்பார்கள் இக் கிராமத்தை மேல்நிலைக்கு கொண்டுவர பாடுபடும் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும் கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .