அக்டோபரில் விடுமுறைகள் ஏராளம்:
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு,
அக்டோபர் மாதம், கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால், விடுமுறைகள்
அணிவகுக்க, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர்.
அக்டோபரில்,
தசரா திருவிழாவும், நவம்பரில், தீபாவளி பண்டிகையும் வருவது வழக்கம்.
நடப்பாண்டு இவ்விரண்டும், அக்டோபரிலேயே வந்து, மக்களை குஷியில்
ஆழ்த்தியுள்ளது.
அக்டோபர், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி,
ஞாயிற்றுக்கிழமை வந்ததால், ஒரு விடுமுறையை ஊழியர்கள் இழந்துள்ளனர். அக்.,
10ம் தேதி ஆயுத பூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி மொகரம், 15ம் தேதி
வால்மிகி ஜெயந்தி என, விடுமுறைகள், அணிவகுக்கின்றன. அக்டோபர், 13 மற்றும்,
14ம் தேதி, இரு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால், 9 நாட்கள் விடுமுறையை
அனுபவிக்கலாம். இத்துடன் விடுமுறை பட்டியல் முடியவில்லை.
அக்டோபர்,
29ம் தேதி சனிக்கிழமை தீபாவளி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர், 1ம் தேதி
கன்னட ராஜ்யோஸ்தவா என தொடர்ந்து விடுமுறையை கொண்டாடலாம்.
அரசு,
தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி வங்கிகளுக்கும், அக்டோபரில், 13 நாட்கள்
விடுமுறை கிடைக்கிறது. எனவே, பணப்பரிமாற்றம் உட்பட இதர பணிகளை விரைவில்
முடித்துக்கொண்டால், அவதிப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
அக்டோபரில்,
ஐந்து சனிக்கிழமை, ஐந்து ஞாயிற்றுக்கிழமை, ஐந்து திங்கள் கிழமைகள்
வருகின்றன. இதுபோன்ற மாதம், எப்போதாவது அபூர்வமாக வரும் என, எண் கணித
நிபுணர்கள்
கூறியுள்ளனர்.
காவிரி நீர் வழக்கு
விசாரணையில் கர்நாடக தரப்புக்கு, வக்கீல் பாலி நாரிமன் ஏன் வாதாட வில்லை என
தெரியவில்லை. ஆனால், அரசியல் சாசன பெஞ்ச் முன் மறுபறுசீலனை மனு தாக்கல்
செய்திருக்க வேண்டும். இது குறித்து முதல்வர் சித்தராமையாவிடம்
கூறியிருந்தேன். தற்போது இது பற்றி பேசுகிறார். காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு தெரிவிப்போம்.
பி.எஸ்.எடியூரப்பா
மாநில பா.ஜ., தலைவர்







