உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு.
அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., - பி.பி.எஸ்., - பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்
இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்
முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.








