தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு படையினர் செயல் விளக்கம் அளித்தனர்.
தீபாவளிப்
பண்டிகையின் போது பல இடங்களில் தீ விபத்துகளும், சிலருக்கு
தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். எனவே பொதுமக்களுக்கு தீபாவளி
பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் தீவிபத்து
ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்.தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பட்டாசு வெடிக்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற தீயணைப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.
படடாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்; முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
குழந்தைகளை சட்டைப் பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே வெடிக்கச் செய்யுங்கள்.
ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.
வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
பட்டாசு வெடிக்கும் போது ஒருவாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்பிற்காக இருக்கட்டும்.
நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கைகளில் பிடித்து வெடிக்கும்போது தூக்கி எரியும் சாகசங்களை செய்ய வேண்டாம்.
எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்; உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்; இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்; உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.








