சின்ன வயசுல அப்பா புதுவருச காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருதுன்னு. எத்தினி நாள் லீவு வருதுனு தான்? அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்.தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும், என்னா வெடி வாங்கணும்னு திட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு சின்ன புள்ளயா மாறிடும்.
தீபாவளி முதல் நாள் நைட்டு பசங்க எல்லாம் வீட்டுல இருந்து சேத்து வச்ச காசை எடுத்து தீன் சிக்கன் கார்னர்லா முழு கோழி வாங்கி நண்பன் வீட்டு மாடில உட்காந்து சாப்பிட்டது எல்லாம் சொர்க்கம்.
தீபாவளி முதல் நாள் கூட்டத்துல விடியற்காலை 3 மணி வரை விளக்குத்தூண், கீழவாசல் பக்கம் ரவுண்ட் அடிச்சிட்டு வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு, 6 மணிக்கே எந்திரிச்சி எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, 7 மணி மொத ஷோ படத்துக்கு போய் அமிர்தம் தியேட்டர்ல தொண்டை கிழிய கத்தி பிடிச்ச ஹீரோவோட படத்தை பாத்து, அப்பிடியே ப்ரண்ட் வீட்டுல சாப்பிடிட்டு, மத்தியானமே இன்னோரு படத்துக்கு போய் பாத்துட்டு தீபாவளியை கொண்டாடிய நாட்கள் எல்லாம் திரும்ப வராது. அதெல்லாம் உலக நாயகன் சொல்ற படி ஆராயக்கூடாது அனுப்பவிக்கனும்.
இன்னும் எழுத எழுத நிறைய தோணுது.
இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க. அடையார் ஆனந்தபவன்ல அரை கிலோ ஸ்வீட்டு வாங்கிட்டு, அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு....
ஒண்ணு மட்டும் நிச்சயம். பணம், சம்பாத்தியம் & கார்பெரேட் வாழ்க்கைனு ஒரு மாயவலையை உருவாக்கி வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வர்றோம்.
Advance Diwali Wishes...!!!








