அபராதமின்றி, மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்படாது' என, மின்
வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசின் அறிவிப்பின் படி, டிச., 15
வரை, மின் நுகர்வோரிடம் இருந்து, பழைய, 500 ரூபாய் நோட்டு
ஏற்கப்படும்.வீடுகளில், மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 முதல், 30
வரை இருப்பின், அவர்கள்அபராதமின்றி கட்டணம்செலுத்த, ஏற்கனவே அவகாசம்
வழங்கப்பட்டது; அது, நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, மின் நுகர்வோர்,
தங்களுக்குரிய கட்டணத்தை, உரிய நாட்களுக்குள் செலுத்தி, மின் துண்டிப்பு
போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







