புதுடில்லி : சினிமா தியேட்டர்களில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தியேட்டர்களில் தேசிய கீதம் :
வழக்கு
ஒன்றில் உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், நாடு முழுவதிலும் சினிமா
தியேட்டர்களில் படம் துவங்குவதற்கு முன் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட
வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி காட்டப்பட
வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது தியேட்டரில் உள்ள அனைவரும்
எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். எந்த காரணத்திற்காகவும், தேசிய
கீதத்தின் சுருக்க வடிவம் இசைக்கப்படக் கூடாது. அதனை ஏற்றுக் கொள்ள
முடியாது என தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உறுதி :
சுப்ரீம்
கோர்ட்டின் இந்த உத்தரவை கட்டாயம் நிறைவேற்றுவோம். இந்த உத்தரவை
நிறைவேற்றுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என
சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தியேட்டர்களில் தேசிய
கீதம் இசைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு மீடியாக்கள் மூலம் விளம்பரம்
செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.







