இந்த வருடம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள்.
தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே எழுதினார்கள். இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர் ) 3–ந்தேதி தொடங்குகிறது. அந்த தேர்வு டிசம்பர் 9–ந்தேதி வரை நடக்கிறது. ஹால் டிக்கெட் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.








