கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும், கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், 8ம் தேதி நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அவற்றை, வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, ஆறு நாட்களாக, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் புதிய, 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேராததால், வங்கிகள், 100, 50 ரூபாய் நோட்டுகளை வினியோகித்து வருகின்றன.ஒருநபர், தன் அடையாள அட்டையை காட்டி, ஒரு நாளைக்கு அதிகபட்சம், 4,500 ரூபாயை, வங்கிகளில் மாற்றிக் கொள்ள லாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தங்களது பணத்தை, 'பினாமி' நபர்களை நியமித்து மாற்றுகின்றனர். இதை ஒரு தொழில் போல செய்வதற்கு, புரோக்கர்களும் முளைத் துள்ளனர். இவர்கள், ஆட்களை ஏற்பாடு செய்து, பல்வேறு வங்கி கிளைகளுக்கும் அனுப்பி, கறுப்பு பணத்தை மாற்றி கொடுத்து, கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.
இது குறித்து, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரல்களில் அழியாத மை வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆய்வுக்
எனவே, இனி பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவோரின் கையில், அழியாத மை வைக்க முடிவெடுக்கப் பட்டு உள்ளது.
தற்போது, வங்கிக் கிளைகளில், ஒருநபர், ஒரு நாளில், 4,500 ரூபாய்க்கு, பழைய நோட்டுகளை மாற்ற முடியும். ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளுக்கு சென்று, மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்றுவதை தடுப்பதற்கு மை உதவும்.
இது தவிர, கள்ள நோட்டு புழக்கத்தை கண் காணிக்கவும், கறுப்பு பணம், 'டிபாசிட்' செய்யப் படுவதை தடுக்கவும், அதிரடிபடை அமைக்கப் பட்டு உள்ளது. சமூக வலை தளங்களில் வரும் தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்கிகளில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றுபவர்கள் விரலில் மை வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விபரங் களை வெளியிடாமல் பிரதமர் மோடி ஏன் மறைக்க வேண்டும்? அவர், அந்த பட்டியலை உடனே வெளியிட வேண்டும். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. மக்கள் தங்களின் சொந்த பணத்தை கூட வங்கி யிலிருந்து எடுக்க விடாமல் மத்திய அரசு தடுக் கிறது.இவ்வாறு, காங்., அறிக்கையில் கூறப் பட்டுள்ளளது.
டில்லி சட்டசபையின் சிறப்புகூட்டம்நடந்தது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். தீர்மானத்தில் 'கறுப்பு பணத்தை ஒழிக்க,
சென்னையில் இந்தியன் வங்கியின் திட்டம் மற்றும் தகவல் தொடர்பு பொது மேலாளர் நாகராஜன் நேற்று கூறுகையில், ''அழியாத மையை, மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்தில் இருந்து வரவழைக்க வேண்டும். ஆனால் மை தொடர்பான விரிவான தகவல்கள் எங்களுக்கு இன்னும் வரவில்லை. முழு விபரங்கள் இன்று தெரிய வரும்,'' என்றார்.
அழியாத மை வாங்குவது தொடர்பாக, சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி அலு வலகத்தில் விசாரித்தனர். அவர்கள் கூறுகை யில், 'அழியாத மையை எங்கு வாங்குவது என எங்களுக்கு நேரடியாக உத்தரவு வரவில்லை. அதனால்,தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை நடத்தினோம். தற்போது பெங்க ளூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் மை வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளோம்' என்றனர்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப் படும். தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அந்த குழப்பத்தை தவிர்ப்பதற்காக வலது கையில் மை வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதற்கட்டமாக அதிக பணப் பரிவர்த்தனைகள் நடக்கும் நகரப் பகுதிகளில் மட்டும் மை வைக்கப்படும்; பின் தேவைப்படும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.








