டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும்
மாணவர்களுக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள்
துவக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர், சுப்பையன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 85 காலிப் பணியிடங்களை நிரப்ப,
குரூப் - 1 முதன்மை தேர்வை, பிப்., 19ல் நடத்த உள்ளது. இத்தேர்விற்கான இலவச
பயிற்சி வகுப்பு, அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும்,
துவக்கப்பட உள்ளது. இதில், பாடவாரியான வகுப்புகள், மாதிரி தேர்வுகள்
நடத்தப்படும்; பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.
எனவே, தேர்வுக்கு
தயாராகும் இளைஞர்கள், தங்களின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு
கொள்ளவும். அதேபோல், தபால் துறையில், 5,014 காலியிடங்களை நிரப்ப,
மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு, 2017 ஜன., 7 முதல் பிப்., 5 வரை நடக்க
உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகளும், மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களில், துவக்கப்பட
உள்ளன.இவ்வாறு சுப்பையன் தெரிவித்துள்ளார்.