ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,
மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,
கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.








