புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி அதிகாரிகள் தகவல்:
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், 500 ரூபாய் நோட்டுகள்,
வங்கிகளில், இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளதாக, வங்கி அதிகாரிகள்
தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாததாக அறிவிக்கப்பட்ட பின், 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம்
செய்யப்பட்டது. புதிய, 500 ரூபாய் நோட்டுகளை, தமிழகத்திற்கு அனுப்புவதில்
தாமதம் ஏற்பட்டது. அது, 13ம் தேதி மாலை, சென்னை ரிசர்வ் வங்கிக்கு
வந்துள்ளது; ஆனால், இன்னமும் மற்ற வங்கிகளுக்கு சென்று சேரவில்லை. அதனால்,
500 ரூபாய் நோட்டுகள், இன்று மாலை, சென்னையில் மட்டும் கிடைக்கும். மற்ற
பகுதிகளில் கிடைப்பதற்கு, ஓரிரு நாட்கள் ஆகும்.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.







