ஜனவரி 1ம் தேதி
முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை
அவசியமாகிறது. 2017 ஜூன்
30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்கு
ஏற்பாடு செய்ய கால அவகாசம்
தரப்பட்டுள்ளதாக ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி
பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே
பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் பரிவர்த்தனைக்கு
எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய
எண், பயோ மெட்ரிக் அடையாளம்
ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி
செய்யும் கருவிகளை வைத்து இருக்கவும்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை
எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்
அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.







