வீரதீர செயல்களில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றுவோரின் மெச்சத்தக்க
செயல்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை
முன்னிட்டு ஜீவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்
இந்த ஆண்டுக்காக மொத்தம் 36 பேருக்கு ஜீவன் ரக்சா பதக்கங்கள்
வழங்கப்படுகின்றன. இந்த பதக்கங்கள் வழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வோத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், உத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், ஜீவன் ரக்சா பதக்கம் என மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அதில் 7 பதக்கங்கள் உயிரிழந்த பின் வழங்கப்படவுள்ளன.
அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தலா 5 பேர்
இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிசோரம், மகாராஷ்டிரா,
மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 4 பேரும், கர்நாடகா மற்றும்
சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து தலா இரண்டு பேரும் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.சர்வோத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், உத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், ஜீவன் ரக்சா பதக்கம் என மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அதில் 7 பதக்கங்கள் உயிரிழந்த பின் வழங்கப்படவுள்ளன.
அசாம், மேகாலயா, மணிப்பூர்,ஒடிசா, அரியானா, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பங்கஜ் குமார் பாண்டேவுக்கு ஜீவன் ரக்சா பதக்கம் வழங்கப்படுகிறது.







