இதன் தொடர்ச்சியாக, மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் Pan அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தக் காலக்கெடுவுக்குள் Pan அட்டைகளை அளிக்காதவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி, Form-60 எனப்படும் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பூஜ்யம் இருப்பு எனப்படும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.