கேரளாவில் கடலுக்கு அடியில் திருமணம் செய்துள்ள காதல் ஜோடி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகில் பவார் என்பவர் கோவளத்தில் டிரைவராக
பணிபுரிகிறார். கோவளம் கடற்கரை சுற்றுலா தளம் என்பதால் அங்கு அதிக அளவில்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
ஸ்லோவோகியா
நாட்டைச் சேர்ந்த யுனிகா போக்ரான் என்பவர் கோவளத்திற்கு சுற்றுலா வரும்
போது நிகில் பவாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையில் நட்பாகி,
நட்பு காதலாக மாறியது. இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்ள
முடிவெடித்தனர்.
இருவரும் மகாராஷ்டிரா மாநிலம்
சென்று பதிவுத் திருமணம் செய்துள்ளனர். பின்னர், திருமனத்தை கொஞ்சம்
வித்தியாசமாக கடலுக்கு அடியில் சென்று செய்யலாம் என முடிவெடுத்து இதற்கான
ஏற்பாடுகளையும் செய்யத்
தொடங்கினர்.
கேரள
மாநிலம் கோவளத்தில் உள்ள கடலுக்கு அடியில் இன்று திருமணம் நடைபெறும் என
அவர்கள் அறிவித்திருந்தனர். திருமணத்திற்காக மணமக்கள் நிற்பதற்காக சிறிய
மேடை ஒன்று கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டது. கடலுக்கு அடியில்
பயணம்
செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கூபா உடைகளை திருமண ஆடையாக மணமக்கள்
இருவரும் அணிந்திருந்தனர். சங்குகளால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றியும்
விரலில் மோதிரம் அணிவித்தும் திருமணம் செய்து கொண்டனர்.
தனது
கனவு மெய்பித்துள்ளதாக மணமகன் பவார் தெரிவித்தார். கடலுக்கு அடியில் பயமாக
இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்ததாக மணப்பெண் யுனிகா போக்ரான்
கூறியுள்ளார்.
இந்தியாவில் கடலுக்கு அடியில்
நடந்த முதல் திருமணம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மிகவும்
வித்தியாசமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களுக்கு நெருக்கமான நண்பர்கள்
மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.